Saturday, 22 June 2013

Yen Mael Vizhuntha Songs Lyrics


என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன் (என் மேல்)

மண்ணைத் திறந்தாள் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தாள் நீயிருப்பாய்
ஒளியைத் திறந்தாள் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தாள் நீயிருப்பாய்
வானம் திறந்தாள் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தாள் நீயிருப்பாய்
இரவைத் திறந்தாள் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய் (என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ (என் மேல்)

No comments:

Post a Comment